தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி 'லீவ்' போராட்டம்: ஆசிரியர்பயிற்றுனர்கள் மூலம் பாடம் நடத்த கல்வித் துறை அதிகாரிகள் திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2014

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி 'லீவ்' போராட்டம்: ஆசிரியர்பயிற்றுனர்கள் மூலம் பாடம் நடத்த கல்வித் துறை அதிகாரிகள் திட்டம்.


தமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை, 'பிசு பிசுக்க'வைக்க, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம்,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும்தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், இம்மாதம் 26ல்,ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 25ல் உள்ளிருப்புப் போராட்டமும் நடக்கிறது. ஒரே நாளில், 60 ஆயிரம் ஆசிரியர்கள் வரை விடுப்பு எடுப்பதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் (பி.ஆர்.டி.,), 25 மற்றும் 26ல், தொடக்கப் பள்ளிகளில் பாடம் நடத்த கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

2 comments:

  1. 25,26,27 la SMC trg iruku, eppdi BRTE padam nadathuvanga

    ReplyDelete
  2. B.R.T.I vachu 1 vadhukku. Paadam nadathuvangla?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி