டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு


டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.



ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாதுஎனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே இதையடுத்து டிட்டோஜாக்தலைவர்கள் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடி விவாதிக்கின்றனர். அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ. முத்துசாமி தெரிவித்தார். பள்ளிக்கல்விச் செயலாளருடனான சந்திப்பின் போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.

மூன்று நபர்க் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன் பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக்கல்விச் செயலர் தெரிவித்தாக தெரிவித்தார்.

2 comments:

  1. Why don't ur federation claim to B.T. promotion in Elementary Department. Did u see any news paper?? Tomorrow, School Education contact the B.T. promotion. If u have any feeling for Elementary seg. grade trs,, Plse, claim our govt to B.T. promotion in Elementary Department.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி