பொதுத்தேர்வுக்கு வழிகாட்டும் கையேடு- பள்ளி கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2014

பொதுத்தேர்வுக்கு வழிகாட்டும் கையேடு- பள்ளி கல்வித்துறை வெளியீடு.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதுவதற்கு வசதியாக, அனைத்து பாடங்களுக்கான வழிகாட்டுதல் கையேடு பள்ளிக் கல்வித்து றை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் ஏற்கனவே கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் போன்றவர்களின் முழுமையான தகவல்கள், துறைகளுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துதல், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்விசார் பாடப் பொருள் பகிர்ந்தளிக்கும் தளம் போன்றவை இணைய தளம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர் கள் பயன்பெறும் வகையில் கையேடு ஒன்றை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பொதுத் தேர்வை பயமின்றி எதிர்கொண்டு சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெறும் வகையில் அந்த கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கையேட்டை வைத்து ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழிகாட்ட ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கையேட்டில் அனைத்து பாடங்களும் வழிகாட்டுதல்கள் உள்ளன. இதை பள்ளிக் கல்வித்துறையே தயாரித்துள்ளது. இந்த கையேடு www.ecs.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி