ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.


ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் பழனிமுத்து, ரமேஷ் மற்றும் ராஜரத்தினம் உட்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:– தகுதி தேர்வு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி வருகிறது. ஆந்திரா உள்ளிட்ட 13 மாநில அரசுகள், இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுகிறது. ஆனால், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை. இந்த தகுதி தேர்தவில் 60 சதவீதம் மதிப்பெண்கள் (150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண்) எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று நிர்ணயம் செய்து, தேர்வை நடத்தி வருகிறது. இது அரசியல் சட்டத்துக்கும், இடஒதுக்கீடு முறைக்கும் எதிரானது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தரமான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில், எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க முடியாது' என்று கூறியிருந்தது.இந்த மனுக்களை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:–அரசின் தீர்க்கமான முடிவு பொதுவாக அரசின் கொள்கை முடிவு என்பது கோர்ட்டின் பரிசீலனைக்கு கீழ் வராது. ஒருவேளை அந்த கொள்கை முடிவு தன்னிச்சையாக இருந்தால் மட்டுமே, அதில் கோர்ட்டு தலையிட முடியும். தரமானகல்வி வழங்குவதற்காக, ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று அரசு தீர்க்கமானமுடிவு எடுத்துள்ளது.

மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தகுதி மதிப்பெண்ணில் எந்த சலுகைகளும் வழங்க வில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசு தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கலாம் என்று கூறியுள்ளது.இந்த நாட்டின் வருங்கால தலைவர்களான குழந்தைகளின் நலன் கருதி, தமிழக அரசுதன்னுடைய தனி அதிகாரத்தை நேர்மையாகவும், நியாயமாகவும் எடுத்துள்ளது. எனவே இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததன் அடிப்படையில், இந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இந்த வழக்கில் ஒரு மனுதாரரான ராஜரத்தினம் என்பவர், இது தொடர்பான வேறு ஒரு வழக்கில் மனுதாரர் நிர்மலா என்பவருக்காக ஏற்கனவே ஆஜராகியுள்ளார். ஆனால், இந்த விவரத்தை இந்த கோர்ட்டுக்கு தெரியப்படுத்தாமல் அவர் மறைத்துள்ளார்.

எனவே அவருக்கு வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் விதிக்கிறோம். இந்த தொகையை 2 வாரத்துக்குள் தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

25 comments:

  1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தகுதி மதிப்பெண்ணில் எந்த சலுகைகளும் வழங்க வில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசு தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கலாம் என்று கூறியுள்ளது.இந்த நாட்டின் வருங்கால தலைவர்களான குழந்தைகளின் நலன் கருதி, தமிழக அரசுதன்னுடைய தனி அதிகாரத்தை நேர்மையாகவும், நியாயமாகவும் எடுத்துள்ளது. எனவே இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததன் அடிப்படையில், இந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.

    By the way ..,

    வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் விதிக்கிறோம். இந்த தொகையை 2 வாரத்துக்குள் தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு !!!

    Do this fine amount all written, may be applicable., .........................


    Given to passed candidates A/c nos.., 1000 per month., RTGS..

    ReplyDelete
  2. Courtum samsrasam seiya mudiyathu soliyatchu uyar kalvi amaichararum mudiyathu solitar anna amma electionaku payanthu 5% koduthuttanga ippo court sonaa padi job poduvangala illa amma sona padi job poduvangala

    ReplyDelete
  3. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.
    தகுதித்தேர்வு மதிப்பெண் உள் ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்க அரசு முடிவுசெய் துள்ளது.

    மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 12,596 பேர், பட்ட தாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 14,496 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்நிலையில், இடஒதுக்கீடுப் பிரி வினருக்கான தேர்ச்சி மதிப்பெண் ணில் 5 சதவீதம் சலுகை வழங்கி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எனவே, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் இரு தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். சலுகை காரணமாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவர் என்ற விவரத்தை இடஒதுக்கீடு பிரிவுவாரியாக கணக் கெடுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    வெயிட்டேஜ் மார்க் மூலம் கட்ஆப் மதிப்பெண் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த மார்க் 100. இதில் 60 சதவீத மதிப்பெண் தகுதித் தேர்வுக்கும், எஞ்சிய மதிப்பெண்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரி யர் பட்டயத் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    60 சதவீதம் தேர்ச்சி என்ற கணக்கீட் டின் கீழ் முன்பு அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி, தகுதித் தேர் வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக் கப்பட்டுவிட்டது. அப்போது கட்ஆப் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது. இதில் 73, 74, 75, 76, 77 கட்ஆப் மதிப்பெண்ணில் ஏராளமானோர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ஒரே கட்ஆப் மதிப்பெண் வந்தால் தகுதித் தேர்வு மதிப்பெண் பார்க்கப்படுமா? பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படுமா? அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை பார்ப்பார்களா என்ற பல்வேறு சந் தேகங்கள் சான்றிதழ் சரிபார்ப் புக்கு சென்றுவந்த ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, பணிநியமனப் பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
    ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந் தால், பிறந்த தேதி அடிப்படையில், அதாவது வயதில் மூத்தவர்க ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    ReplyDelete
    Replies
    1. sir my mark is 65 anna na 85 nu veetla solita eppa enna panrathu na suside panratha illa vera valli iruka

      Delete
    2. தயவு செய்து அது போன்ற செயல்களில் ஈடு பட வேண்டாம் ...TET 2014 OR CTET 2014 இருக்கு நன்றாக 1 TO 12 TH BOOKS படியுங்கள்... வெற்றி நிச்சயம் ....

      Delete
    3. மேடம் நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் ..நான் தவறாக CASTE COLUMN IL OC என்று போட்டுவிட்டேன் ..என்று மட்டும் சொல்லிவிட்டு இனி வாழ்க்கையில் நம்மை நம்புபவர்களிடம் பொய்யே சொல்லமாட்டேன் என்று சத்தியம் எடுத்து கொள்ளுங்கள் ...ஒரு பொய்யை மறைக்க 1௦௦௦ பொய் சொல்லும் நிலைமை இனி வேண்டாம் ...

      Delete
    4. sir thanks anna vettla call letter vantha udan pooga solranga enna panrathunu theriyala veetla ellarum santhosama irrukanga avanga kanava oddaika verumbala athanala suscide panalanu irruka

      Delete
    5. சார் நான் என்ன பணறது

      Delete
  4. Court ippadi oru judgement koduthathaley ippa pass panavanga marupadiyum courtku pogamma iruka ellarukum 5% koduthuta (including OC) nalla irukum pirachanaiku idamilai ippadiyey vittal pirachanai mudiyathu

    ReplyDelete
  5. the court doesn't given mark [ thaakuthi tharvil 90 mark kattayamunum solliirukku] in the tet exam, so court thirpai amuil patutha vaendum.

    ReplyDelete
  6. Mr.ravikumar ungaladhu commentuku nanri. Idhe pol kalviseithium news paperil varum thagavalgalai Mattum veliyidamal, Trb idam neradi nirubargal or aatkalai kondu 82 -89 categoryku weitage mark. Evalavu? Therndhedukapadum murai(tet mark adipadaiyila or wt mark adipadaiyila)? AAppointment order epoludhu , engu valangapadum? Pondra ubayoganana thagavalgalai theera visarithu, paraparukaga illamal unmaiyana urudhiyana thagavalgalai, ungaladhu thagavalgalai mattume nambi irukkum kalviseithi vasagarkaluku payanulladhaga irukum. kalviseithi menmelum valarum, tharam uyarum, nambagathanmaiodum irukkum. (Eduthukattaga tetil adhiga wt ulavargaluku dinakaranil Feb 24 pani niyamana anai enavum dinamalaril ippoludhu velai illai endrum marupatta seidhigalai veliyidamal..unmaiyana urudhiyana thagavalgalai suyamaga visarithu veliyidavum

    ReplyDelete
    Replies
    1. tell ur parents that nan coding thappa panniten so mark varalanu sollunga

      Delete
    2. sir ennala sollamudiyathu enna enoda relation ellorum nambitanga na pass nu

      Delete
    3. நண்பர்களே உயர் அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் தெரிய வாய்ப்பே இல்லை ...எனவே முறையான அறிவிப்பு வந்த பின்பே எதையும் உறுதியாக கூற முடியும் ...நான் ஒன்றும் TRB CHAIRMAN இல்லை ...நானும் உங்களைப்போல் தான்... ஏதாவது ந்யூஸ் கிடைக்காதா என்று நாயாய் அலைகின்றேன்...

      Delete
  7. ஒரு ஏலையின் கதறல்
    i am sc candidate
    பி.எட் ஆங்கிலம் 2008 ல பாஸ் பண்ணினேன் சீனியாரிட்டி இல்லன்னு சொல்லிட்டாங்க
    போன டெட்ல 84 எடுத்தேன்
    ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சி இப்போ 97 எடுத்தேன்
    நான் படிக்கும் போது மார்க் அதிகமா மார்க் வாங்க முடியல ( போட மாட்டாங்க) அதனால வெஇடெஜ் மார்க் 66 தான்
    ஆனா இப்ப அப்படி இல்ல எல்லோரும் வெஇடெஜ் மார்க் அதிகமா வச்சிருக்காங்க

    சீனியாரிட்டியும் இல்ல எனக்கு வெய்டேஜும் இல்ல அதனால எனக்கு வேலையும் இல்ல வாழ்கையே வெறுத்து போகுது.
    இப்படிக்கு
    இந்த சமுதாயத்தை வெறுக்கும் உங்களில் ஒருவன்

    ReplyDelete
  8. நம்பிக்கை இழக்காமல் காத்திருப்போம் நண்பர்களே. அரசு ஆணை வெளிவந்த பின்பு தான் தேர்வு செய்யும் முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும். அதுவரை பத்திரிகையில் வரும் செய்திகளும் நாம் பகிரும் கருத்துகளும் யூகங்களே.

    ReplyDelete
  9. Sir, you finished 2008. I finished B.Ed., 1995. No internal mark. Very difficult to get mark on that time. Govt. should see the state average. Then only they know the difficulties us. Ithu ennathu polambal only Not blame others. so mr. MASS Don't feel. we should accept these type of failures.

    ReplyDelete
    Replies
    1. Thanks சார் but i really very upset govt jobba நம்பி இருந்த vellaiya விட்டுட்டேன் இப்போ அதிலயும் சேர முடியாது என்ன மாதிரி எத்தன பேர் கஷ்ட படுரங்கலொ தெரியல கஷ்டப்பட்டு படிச்சி டெட் பாஸ் பண்ணினேன் தகுதியானவங்க மட்டும் தான் teachera வர முடியும்னு சொல்லி weight-age மார்க் பார்க்கறாங்க இப்போ weightage பார்த்து select பண்றாங்க sir நான் பெருமைக்காக சொல்லல நான் class eduththa students நல்லா புரிஉது சார் supera நடதுரிங்க nu solluvanga 100% result niraya thadava குடுத்திருக்கேன் athukkaka prize kooda vaangi irukken இப்போ இந்த weight-age பார்த்து select பண்ணினா நான் என்ன தகுதி இல்லாத ஆசிரியரா என்ன கொடும sir entha tetla pass panni experience இருந்தும் select ஆகலின பாருங்க sir weightage marka vachi eppadi sir oru thiramayana aasiriyanu solla mudiyum schoola nalla padikkathavanga ethanayo per collegela padichi thannoda thiramaiya valaththukittu periya aala aakirukkanga.eppa enna mathiri eathanayo per valkkai ???? irukku.

      Delete
  10. வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்த சில குறிப்புகள் விவாதத்திற்காக
    1. 12ஆம் வகுப்பில் வித்தியாசமான பாடத்திட்டங்களைப் படிப்பவர்களுக்கு மொத்த மதிப்பெண்கள் தான் ஒன்றே தவிர ஒவ்வொரு பாடத்தையும் பயிலும் முறையும் மதிப்பிடும் முறையும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
    2. கல்லூரி படிப்பிலும் வெவ்வேறு பாடத்திட்டங்கள். வெவ்வேறு விதமான மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது.
    3. சில கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பாடங்கள் அமைந்துள்ளன. சிலருக்கு மொத்தம் 28 தாள்கள். சிலருக்கு 30 முதல் 40 தாள்கள்.
    4. சில கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் முக்கிய பாடம் தவிர பார்ட் 4 பார்ட் 5 என சில சிறப்பு பாடங்கள் (தன்னாட்சி கல்லூரிகளில்) தரப்பட்டு அவற்றிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
    5. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஒரே காலக்கட்டத்தில் படித்தவர்கள் அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவர்களும் உண்டு ( திரு. அறிவுமதி (வயது 58), திரு. ஜனார்த்தனம் (வயது 52) மற்றும் 35 வயதைக் கடந்தவர்கள் பலரும் இப்போட்டியில் ஐக்கியமாகி உள்ளனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மதிப்பிடும் முறையில் மாற்றங்கள் இருந்திருக்கிறது.
    6.ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தவரும் 104 மதிப்பெண் எடுத்தவரும் ஒன்று என (15 மதிப்பெண்கள் சமமென) மதிப்பிடப்படுகிறது.
    7. இடைநிலை ஆசிரியருக்கான தகுதிப் பாடங்களான 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.Ted) மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. அதே போல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதிப் பாடங்களான இளநிலை பட்ட மதிப்பெண் (B.A., B.Sc.) மற்றும் ஆசிரியர் பட்ட மதிப்பெண்கள் (B.Ed) தானே மதிப்பிடப்படவேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் தேவையில்லாமல் ஏன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

    இப்படி ஒவ்வொருவரும் தனித்துவமான கல்வி கற்று மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பொதுவான அளவுகோல் வைத்து மதிப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்தி அரசானை பிறப்பிக்கப்படுமா? மாணவர் மற்றும் ஆசிரியர் நலனில் அக்கறை உள்ள கல்விச்செய்தி போன்ற ஊடகங்கள் (இது போன்ற இன்னும் நண்பர்களின் மனதில் உள்ள தவிர்க்க இயலாத கருத்துகளை) அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உதவுவார்களா?

    ReplyDelete
  11. sc ku yen vaipu thara matriga entha tamil nadu la iruga pitikala cha.......... sc cutoff kodutha nan pass airupen yen TET 1 mark 81 nan yenna pantrathu solluga entha ammaku sc mela avalau pitivatham ethu nayama???????????

    ReplyDelete
    Replies
    1. சார் நான் என்ன பணறது

      Delete
  12. Honorable CM
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Weightage மதிப்பெண்களில்
    அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊக்க மதிப்பெண் (BonusMark) வழங்கப்பட்டால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் அரசு பள்ளிகளில் படித்தவர்களும் பயன்பெறுவர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி