தமிழக மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க பல்கலை மாநாட்டில் விவாதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2014

தமிழக மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க பல்கலை மாநாட்டில் விவாதம்.


அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்புகுறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு,
அம்மாணவர்,"டெலி கான்பரன்சிங்' மூலமாக விளக்கம் கொடுத்தார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பிளஸ் 1 மாணவர் டெனித்ஆதித்யா,16. தொடர்ந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகிறார் இவர், கடந்த இரண்டு ஆண்டிற்கு முன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக, வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு, வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். இதற்காக, பல்வேறு மாநில விருதுகளையும், மத்திய அரசின் தங்கப்பதக்கம், விருது பெற்றுள்ளார். தனது கண்டுபிடிப்பிற்காக, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். மே மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் மாநாட்டில், இந்தியாவிற்கான கண்டுபிடிப்பை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள, லாங்வுட் பல்கலைக்கழகத்தின், ஏழாவது ஆண்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கற்கும் உச்சிமாநாடு நடந்தது. அதன் இயக்குனர் மனோரமா நிகழ்ச்சியை துவக்கினார். கல்வித் துறையின் டீன் பால்சாப்மேன் தலைமை வகித்தார். அமெரிக் காவில் உள்ள கல்வித்துறை நிபுணர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராமப்புற மேல்நிலை, துவக்கப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், முதலாவதாக இந்தியாவின் சார்பில் தமிழக மாணவர் டெனித் ஆதித்யாவின், வாழை இலை பதப்படுத்தும் தொழில்நுட்பம்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது குறித்து மாநாட்டில் டிஜிட்டல் டிஸ்பிளே போர்டில் அனைவ ருக்கும் விவரித்து காட்டப்பட்டது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் டெனித் ஆதித்யா, திருவனந்தபுரத்தில் இருந்து, "டெலிகான்பரன்சிங்' மூலம் பதிலளித்தும், தனது கண்டுபிடிப்பின் பயன்கள் குறித்தும் விவரித்து பேசினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், அடுத்த உச்சி மாநாட்டின்போது, நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். இவரைப்போல, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் இன்ஜினியர் ஜாபர்அலியின் "மேத்டிஸ்க்' கணித உபகரணம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

4 comments:

  1. Teacher ??? ..., TET .., !!! Student //////

    ReplyDelete
  2. Thamilan endru sollada thalai nimirnthu sellada.

    ReplyDelete
  3. Thamizhan pugaz oongatum ettuthikum.

    ReplyDelete
  4. Oru thamizhanin kandupidippai ulagariya seidhadhu pol innum palanooru kandupidippugalai ulagariya seiya vendum.

    Ulagiliye migavum azhagana purananootru illara vaalvu kanda tamilan than thiramaiyaal ulagai viyavaikka vendum.

    Adharku pillaiyarsuli indha thamilanin kandupidippu.

    Vaazhthugal...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி