ரயில்வே பட்ஜெட் தாக்கல் : பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2014

ரயில்வே பட்ஜெட் தாக்கல் : பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது.


மக்களவையில் கட்டண உயர்வில்லா ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார்.கார்கே தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 4 மாதங்களுக்கான ரயில்வே செலவினங்களுக்கு கார்கே ஒப்புதல் கோரினார்.72 புதிய ரயில்கள் அறிவிப்புஇடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் மொத்தம் 72 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில், கூடுதல் கட்டணம் கொண்ட 17 பிரிமீயம் ரயில்களும், 38 விரைவு ரயில்களும் அடங்கும்.

தமிழகத்திற்கு 4 விரைவு ரயில்கள்:

தமிழகத்திற்கு 4 விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் இருந்து பெங்களுருக்கு தினசரி விரைவு ரயில்

* சென்னையில் இருந்து மும்பைக்கு குல்பர்கா வரை வாராந்திர விரைவு ரயில்

* நாகர்கோவிலில் இருந்து நாமக்கல் வழியாக ஆந்திராவின் கச்சிகுடாவுக்கு வாராந்திர விரைவு ரயில்.

* சென்னையில் இருந்து அசாமின் காமாக்யாக்வுக்கு ஏ.சி. வசதி கொண்ட வாராந்திர விரைவு ரயில்.இவை தவிர, கூடுதல் கட்டணம் கொண்ட 2 பிரிமீயம் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கான பயணிகள் ரயில்கள்:

திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில்

மயிலாடுதுறை - மன்னார்குடி தினசரி பயணிகள் ரயில்

புனலூர் (கேரளா)- கன்னியாகுமரி இடையே தினசரி பயணிகள் ரயில்.

கட்டண உயர்வு கிடையாது:

பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் கார்கே, பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்தார். ரயில்வே துறையின் சாதனைகளை பட்டியலிட்டஅவர், 2000 கி.மீ. இருப்புப்பாதை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால் 2,207 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில்வேஇருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ரயில்வே ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

புதிய திட்டங்கள்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்டாராவுக்கு பயணிகள் ரயில், வடகிழக்கு மாநிலமான மேகாலயாவுக்கு ரயில் சேவை அளிப்பது, வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் யாத்திரிகள் வசதிக்காக ரயில் சேவையை விரிவுபடுத்துவது உள்ளிட்டபல திட்டங்களை அவர் முன்வைத்தார். மேலும், கூடுதலாக அதி வேக ரயில்கள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

நீதி வேண்டும்:

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, சீமாந்திர எம்.பி.க்கள் 'நீதி வேண்டும்' என்று தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். கடும் அமளியை பொருட்படுத்தாமல் அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி