இடைநிலை ஆசிரியர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

இடைநிலை ஆசிரியர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட்டம்.


மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இந்தப் போராட்டத்தில் 750 பேர் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சி.அரிகிருஷ்ணன் தெரிவித்தார்.பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு ஏற்றத் தர ஊதியம் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 மற்றும் 26-ம் தேதிகளில்மாநிலம் தழுவிய 2 நாள் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அறிவித்திருந்தது.அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளியில் வகுப்பு எடுக்காமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

1 comment:

  1. NANGAL TET PASS SEITHU VELAIKKU PORATTAM....

    NEENGAL VELAIKKU SENDRUM PORATTAMA ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி