ஆட்டோ கட்டணம் திடீர் ரத்து: மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2014

ஆட்டோ கட்டணம் திடீர் ரத்து: மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம்.


தமிழகத்தில் பள்ளி செல்ல இயலாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்க மாநிலம் முழுவதும் 400 பகல் நேர பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு மாதந்தோறும் பிஸ்கட்,
பால் உள்பட உணவு செலவுக்கு ரூ.7 ஆயிரம், மையத்திற்கு குழந்தைகளை அழைத்துவர ஆட்டோ கட்டணம் ஸீ4500 என ஒவ்வொரு மையத்திற்கும் ஸீ11,500 வழங்கப்பட்டு வந்தது. ஆட்டோவில் வீடுகளுக்கு நேரில் வந்து மாற்றுத்திறன் குழந்தைகளை, பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் சென்றனர். இதனால், குழந்தைகளை மையங்களுக்கு அனுப்பி ஏழை பெற்றோர்கள் வேலைக்கு சென்று வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு மாற்றத்திறன் குழந்தைகளின் உணவுக்கு வழங்கப்பட்ட தனி நிதி நிறுத்தப்பட்டது. அந்த குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். மாற்றுத்திறன் குழந்தைகளை வீட்டில் இருந்த மையங்களுக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லப்படுவதற்கு தற்போது வேட்டு வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தூத்துக்குடி மாவட் டத்தில் ஆட்டோ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி