பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய முதல்வர் வசுந்தரா. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய முதல்வர் வசுந்தரா.


ராஜஸ்தான் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான, வசுந்தரா ராஜே அரசு பள்ளிகளில் சென்று திடீர் ஆய்வு ur நடத்தியதுடன், மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு அவர்களுக்கு பாடமும் நடத்தினார்.

ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்தது. பா.ஜ., இதுவரை இல்லாத அளவு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று வசுந்தரா ராஜே முதல்வராக பொறுப்பேற்றார்.



இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள வசுந்தரா, மக்கள் மத்தியில் தனக்குஇருக்கும் நற்பெயரை தக்க வைத்து கொள்ள மக்கள் நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் வசுந்தரா, மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்காக நேரடியாக களம் இறங்கியுள்ளார்.தவுல்பூர் மாவட்டம் முகல்புரா கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்ற வசுந்தரா, அங்குள்ள அரசுப் பள்ளியில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அங்குள்ள மாணவர்களிடம்கலந்துரையாடிய முதல்வர் அவர்களின் கல்வித் தரம் மற்றும் ஆங்கில அறிவை சோதித்தார். மாணவர்களிடம் உரையாடியதில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம்அறவே வராதது தெரிந்தது.இதையடுத்து தானே நேரடியாக வகுப்பெடுக்க தொடங்கினார்.

ஆங்கில எழுத்துக்கள் தொடங்கி, இலக்கணம் வரை ஒரு முழு நேர ஆசிரியரைப் போல் மாணவர்களுக்கு முழு சிரத்தையுடன் பாடம் எடுத்தார். பின் பள்ளியின் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதியஉணவின் தரம் குறித்து சோதனையிட்ட முதல்வர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட அதே உணவை தானும் சாப்பிட்டார்.முதல்வரின் வருகை குறித்து முன் அறிவிப்பு ஏதும் தரப்படாததால், பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும், முதல்வர் வசுந்தராவின் நடவடிக்கையால் அதிர்ந்து போயினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி