இன்று மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் பள்ளிக்கல்வித்துறை செயலருடன் நாளையசந்திப்பு பற்றி விவாதம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

இன்று மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் பள்ளிக்கல்வித்துறை செயலருடன் நாளையசந்திப்பு பற்றி விவாதம்...


தொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜாக் சந்திப்பு நிறைவடைந்தது.மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் இன்று (20.2.2014)காலை டிட்டோஜாக் நிர்வாகிகளை தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன்நேரடியாக அழைத்து 7 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாகபேசினார்.

கிட்டதட்ட 90 நிமிடங்களுக்கு மேலான இந்த சந்திப்பில் நமது கோரிக்கையின் நியாயங்களை ஒவ்வொரு இயக்கத்தின் தலைவர்களும் விரிவாக பேசினர்.



இயக்குநர் அவர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து அனைத்து விசயங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டார். இதுகுறித்து அனைத்தையும் உடனடியாக கல்வித்துறை செயலரிடம் எடுத்துரைப்பதகவும், கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களை டிட்டோஜாக் தலைவர்களுடன் சந்திக்கும் ஏற்பாட்டை இன்று மாலைக்குள் தெரிவிப்பதாகவும் இன்முகத்துடன்கூறினார். இச்சந்திப்புக்கு முன்னதாக காலை 10 மணிக்கு டிட்டோஜாக் கூட்டம் தொடக்கக்கல்வி இயக்குநரகம் பார்வையாளர் அறையில் நடந்தது. இதில் இயக்குநரிடம் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

இச்சந்திப்பில்

> தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
>தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
>தமிழக ஆசிரியர் கூட்டணி,
>தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
>தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
>தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்

ஆகிய டிட்டோஜாக் உறுப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் நடைபெறுகிறது. தொடக்கக்கல்வி இயக்குநர் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு,டிட்டோஜாக்கை கேட்டுக்கொண்டதற்கு மார்ச் 6ல் திட்டமிட்டபடிவேலை நிறுத்தம் நடைபெறும் என கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி