முதல்வரின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2014

முதல்வரின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்.


அரசாணைக்கும், முதலமைச்சர் அறிவிப்புக்கும், முர ணாக ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பார்வையற்றவர்களுக்கு மட்டும் தனித்தேர்வு என்ற அறிவிப்பை ரத்து செய்து
அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் நடத்த உத்தரவிடுமாறு, தமிழக முதல் வருக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர்கள் பா.ஜான்சி ராணி, தே.லட்சுமணன், எஸ்.நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர்கள், பார்வை யற்றவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 28ம்தேதி தனியான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருக்கும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளிடையே அதிர்ச்சியையும் ஏமாற்றத் தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பொதுவான ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்வையற்றமற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தேர்ச்சி பெறுவதில் பெரும் சிரமம் இருந்ததால், அந்த முறையை மாற்றுத்திறனாளிகள் எதிர்த்து வந்தனர்.மேலும்,தங்களுக்குரிய சட்டப்படி யான 3 சதவிகித பணியிடங்கள், இதனால் கிடைக்காத நிலை ஏற்பட்டதையும் அரசுக்கு தெரிவித்து வந்தனர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, தனியான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சரின் 30.09.2013 தேதிய அறிவிப்பும். அதனடிப்படையில் 17.12.2013 தேதியிட்ட பள்ளிக்கல்வித்துறை அரசாணை 260ம் வெளிவந்தன.அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுஎன்பதும், பார்வை யிழந்தவர்கள், அவர்களுக்காக தேர்வு எழுதும் உதவியாளர்களுக்கு மட்டும் தனியான பயிற்சி அளிக்க மேற்கண்ட முதலமைச் சரின் அறிவிப்பு மற்றும் அரசாணையின்படி தெளிவாக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், பார்வையிழந்தவர்களுக்கு மட்டும் தனி ஆசிரியர் தகுதி தேர்வு என்கிற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமீபத்திய அறிவிப்பு, நம்பிக்கையுடன் காத்திருந்த உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தை யும் ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சரின் முந்தைய அறிவிப்புக்கும் அரசாணைக் கும் முரணாக உள்ளது. எனவே, முதலமைச்சர் இது விஷயத்தில் உடன் தலையிட்டு, உடல் ஊனமுற்ற ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளும் பங்கெடுக்கும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவுகளை பிறப்பிக்க கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

3 comments:

  1. அரசியல்வாதிகள் என்னவேன்டுமானலும் செய்யலாம் ஆனால் அதிகாரிகள் அப்படியல்ல

    ReplyDelete
  2. cm give the assurance only to blind.not for ortho due to ortho posts are not backlock vacancies

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி