தமிழகத்தில் நடைபெறும் பிளஸ்2 பொதுத் தேர்வை, புழல் சிறையில் உள்ள கைதிகள் 58 பேர் எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைத் துறை மற்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
புழல் சிறையில் 7ம் ஆண்டாக பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுகிறது. சிறை 1-ல் தண்டனை கைதிகள் 15 பேரும், விசாரணைகைதிகள் 3 பேரும், வேலூர் சிறை கைதிகள் 2 பேரும், மதுரை சிறை கைதிகள் 14 பேரும், பாளை சிறை கைதிகள் 4 பேரும், கோவை கைதிகள் 5 பேரும், கடலூர் கைதிகள்12 பேரும், சேலத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 58 பேர் நாளை பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்படி, சிறை துறை தலைவர் திரிபாதி, துணை தலைவர்கள் மவுரியா, ராஜேந்திரன் மேற்பார்வையில் அங்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு கண்காணிப்புக்கு தேர்வு துறை தலைமை கண்காணிப்பாளராக அலமாதி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் சுந்தர்ராஜன், துறை அலுவலர்களாக பாடியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த கலைச்செல்வி, பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிறை துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், துணை கண்காணிப்பாளர் ருக்குமணி பிரியதர்ஷினி, சிறை தன்னார்வ தொண்டு ஆசிரியர் ராஜேந்திரன் மேற்பார்வை செய்கின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி