பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள், வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2014

பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள், வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்.


மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள்ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண் வாக்குப்பதிவு அலுவ லர்கள் வாக்குப்பதிவுக்கு முன் தினமே சென்று விட வேண்டும் என விதிமுறைகள் இருந்தன. இதையும் தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும்.இணையதளங்கள் பயன்பாடுதேர்தல் பிரசாரத்துக்காக இணையதளங் களை பயன்படுத்தினால் அதுவும் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும். இணைய தளங்களை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணைய அனுமதியைப் பெற வேண்டும். எந்த இணைய தளம், அதுகுறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.வங்கி பணப் பரிமாற்றம்வங்கி பணப்பரிமாற்றம் தொடர்பாக இதுவரை வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் தகவலைத் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவோர், கூட்டம் நடப்பதற்கு 12 மணி நேரம் முன்பு தான் மேடை, கொடிதோரணங்களை அமைக்க வேண்டும். அதே போல் கூட்டம் முடிந்த 5 மணி நேரத்தில் அவற்றை அகற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி