50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2014

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை.


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகஉள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.இதில், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகள் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன்பெறுவார்கள்.தற்போது அகவிலைப்படி 100 சதவீதத்தை அடைந்துள்ளதால், இது தொடர்பானபரிந்துரையை ஏழாவது ஊதியக் குழுவுக்கு அனுப்பவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்‌யப்பட்டது.

இதன்மூலம், ஏழாவது ஊதியக் குழு தனது இடைக்கால அறிக்கையில், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்ய முடியும். அவ்வாறு இணைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 30 சதவிகிதம் உயரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி