தமிழகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள, மத்திய பல்கலைகளில், 5,707 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள,
மத்திய உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 42 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கிவருகின்றன. தமிழகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், திருவாரூரில் மத்திய பல்கலை துவக்கப்பட்டது.மேலும், சென்னை அருகில் உள்ள, கடல் சார் பல்கலையும், மத்திய பல்கலை வரிசையில் இணைந்தது.
மத்திய பல்கலைகள், மாநிலங்களின் பல்கலைகள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் வரிசையில் இல்லாமல், தனித்துவம் பெற்றவையாக திகழ்கின்றன. கடந்த, ஜனவரி மாத நிலவரப்படி, நாடுமுழுவதும் உள்ள, 42 பல்கலைகளில், திருவாரூர் மத்திய பல்கலை உட்பட, 39 பல்கலைகளில், பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் என, 5,707 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், தமிழகத்தின், திருவாரூர் மத்திய பல்கலையில், நிர்ணயிக்கப்பட்ட, 151 பணியிடங்களில், இரண்டு பேராசிரியர்கள், ஐந்து இணை பேராசிரியர்கள், 21 துணை பேராசிரியர்கள் என, 28 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
மேலும், 20 பேராசிரியர்கள், 38 இணை மற்றும் 65 உதவி பேராசிரியர்கள் என, 123 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், சமீபத்தில், 77 பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, டில்லி பல்கலையில், 953 பணி இடங்கள், காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி