தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் பல இடங்களில் விண்ணப்பங்களுக்கு தட்டுப்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2014

தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் பல இடங்களில் விண்ணப்பங்களுக்கு தட்டுப்பாடு.


தமிழகம் முழுவதும், நேற்று நடந்த வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில், லட்சக்கணக்கானோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.பல இடங்களில், விண்ணப்பங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது; மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், ஏராளமானோர், 'கடந்த தேர்தலில் ஓட்டு போட்டேன்; இம்முறை, என் பெயரை நீக்கிவிட்டனர்' என, புலம்புவது வாடிக்கை.இப்பிரச்னைக்கு தீர்வு காண, முதன் முறையாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்த,தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.பிரசாரம் அதன்படி, நேற்று, நாடு முழுவதும் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் பெயர் சேர்ப்பு, சிறப்பு முகாம் நடந்தது. தமிழகத்தில், 60,418 ஓட்டுச் சாவடிகளில், சிறப்பு முகாம் நடந்தது. முகாம் குறித்து, மக்களுக்கு தெரியப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.ஓட்டுச் சாவடிகளில், அந்தப் பகுதிக்குரிய வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது. தட்டுப்பாடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், நேற்று, சிறப்பு முகாம் நடந்த ஓட்டுச்சாவடிகளுக்கு, ஏராளமானோர் ஆர்வமுடன் சென்றனர். வாக்காளர் பட்டியலை பார்த்து, தங்கள் பெயர் இல்லாதவர்கள், புதிய விண்ணப்பம் அளித்தனர்.ஏராளமானோர் வந்ததால், சில இடங்களில், விண்ணப்பப் படிவங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னை, வேளச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு, 100 விண்ணப்பப்படிவங்கள் அனுப்பப்பட்டன.

அவை, பகல், 12:00 மணிக்கு, தீர்ந்து விட்டது.அதன்பின் வந்தவர்களிடம், அங்கிருந்த ஊழியர்கள், 'விண்ணப்பப் படிவம் தீர்ந்துவிட்டது. இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து வாருங்கள்' என்றனர்.விவரம் தெரிந்தவர்கள், அதன்படி செய்தனர். பெரும்பாலானோர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாநிலம் முழுவதும், லட்சக்கணக்கானோர், பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, 'சென்னைக்கு, 30 ஆயிரம்விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அவை தீர்ந்து போனால், வாங்கி கொள்ளும்படி தெரிவித்தோம். ஆனால், சில ஊழியர்கள் அதை பின்பற்றாமல் இருந்திருக்கலாம்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி