தேர்வு புகார்களை பெற "கன்ட்ரோல் - ரூம்' அமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2014

தேர்வு புகார்களை பெற "கன்ட்ரோல் - ரூம்' அமைப்பு.


பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் செயல்படும் வகையில், "கன்ட்ரோல் - ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வு, நாளை, 3ல் துவங்கி, 25 வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு, 26ல்துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது. தேர்வு தொடர்பான தகவல்கள், புகார்கள், குறைகள் உள்ளிட்ட பிரச்னைகளை, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு, அதிகாரிகள், உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், "கன்ட்ரோல் - ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது. காலை, 8:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, ஒரு, குழுவினரும், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இன்னொரு குழுவினரும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவர். 044-2827 8284, 044-2827 8286, 044-2827 2088 ஆகிய தொலைபேசி எண்களில், கல்வித்துறை அதிகாரிகள், தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி