எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதி.


எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது.முதல்முறையாக ஓட்டளிக்க உள்ள,
வாக்காளர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே ஓட்டளித்த பலருக்கும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ள பாகம் எண், வரிசை எண் தெரிவதில்லை. எங்கு ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்ற விபரமும்தெரிவதில்லை.வாக்காளர்களின் வசதிக்காக, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு உங்கள் மொபைல் போனில், ரைட் மெசேஜ் பகுதிக்குச் சென்று, திரையில், 'epic' என்று டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு, வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின் அதனை, 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.ஒரே நிமிடத்தில் உங்களுக்கு பதில்கிடைக்கும். அதில் உங்கள் பெயர், பூத் எண், அதன் முகவரி ஆகிய விபரங்கள் வெளியாகும். இந்த விபரம் இருந்தாலே போதும். பூத் சிலிப் கூட தேவையில்லை. இதில் உள்ள விபரம் மூலம் ஓட்டளிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி