ஸ்டிரைக்கை முன்னிட்டு பள்ளி சாவியை, ஏ.இ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து உள்பட, ஏழு அம்ச கோரிக்கை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச், 6ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.இதற்காக அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்குசெல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் மார்ச், 6ம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே, ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த போதிலும், மார்ச், 6ம் தேதி எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரியர்களை பயன்படுத்தி பள்ளியை நடத்த முடிவு செய்துள்ள கல்வித்துறை, இதற்காக போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை கேட்டுள்ளது.
துவக்க, நடுநிலைப்பள்ளியின் சாவி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பில் இருக்கும். பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மார்ச், 6ல் (நாளை ) நடக்கும் ஸ்டிரைக்கில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால், பள்ளி சாவியை அந்தந்த ஒன்றிய, ஏ.இ.இ.ஓ.,க்களிடம் இன்று மாலை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி