அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், பருவமழை பொழிய தவறியதால், சென்னை தவிர, பிற மாவட்டங்கள், வறட்சி மாவட்டங்களாக, தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு, வன துறைமூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பசுமைபடுத்தும் நோக்கத்துடன், மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன்உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும், சுற்றறிக்கைஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில், வன துறை மூலம், 3.76 லட்சம் மரக்கன்று, என்.ஜி.ஓ.,க்கள் மூலம், 13.94 லட்சம் மரக்கன்று பெற இயலும். அந்தந்த மாவட்ட வனத்துறை மற்றும், என்.ஜி.ஓ.,க்கள் மூலம் மரக்கன்று பெற்று, ஒவ்வொரு பள்ளியிலும் மரக்கன்று நட்டு, அதனை வகுப்பாசிரியர் பராமரிக்க வேண்டும்.அதை பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளித்தலைமை ஆசிரியர் கூறியதாவது: பள்ளி வளாகங்களில், மரக்கன்று நட உத்தரவிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பராமரிப்பதில் தான், பள்ளி ஆசிரியர்களுக்குசிக்கல் உள்ளது. தமிழகம் முழுவதும், கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீர் பிரச்னை உள்ளது. சில பள்ளி, பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம், தேவையான தண்ணீர் வசதி செய்துள்ளனர். சில பள்ளிகளில், இக்கழகத்தினர் ஆர்வமின்றி, தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பள்ளிக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், மரக்கன்றுகளை எவ்வாறுபராமரிப்பது இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி