"மை ஸ்டாம்ப்" திட்டம்: கோவையில் வாடிக்கையாளர்கள் ஆர்வம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2014

"மை ஸ்டாம்ப்" திட்டம்: கோவையில் வாடிக்கையாளர்கள் ஆர்வம்.


வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை ஒட்டி அனுப்பும், தபால் துறையின் "மை ஸ்டாம்ப்" திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவையில் மட்டும் இதுவரை 87 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொதுமக்களை கவரும் வகையில், தபால் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

நவீன தகவல் தொடர்பு சவால்களுக்கு இடையேயும் தபால் துறை இன்றும் தனித்துவத்துடனே செயலாற்றி வருகிறது. கடந்தாண்டு தபால் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்ட "மை ஸ்டாம்ப்" திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.வாடிக்கையாளர்கள் தங்கள் படம், அலுவலக அடையாள சின்னம் என விரும்பும் படங்களை தபால்தலையுடன் இணைத்து அனுப்பலாம். ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலையுடன் நமது புகைப்படமும் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பம் செய்யலாம். ஒரு புகைப்படம் பிரசுரிக்க 300 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஐந்து ரூபாய் மதிப்புள்ள 12 புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகள் அடங்கிய அட்டை ஒரு வாரத்துக்குள் நமக்கு வழங்கப்படும்.ஒருவர் எத்தனை அட்டைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். தேசிய விருது பெற்றமுன்னாள் அஞ்சல் அதிகாரி ஹரிஹரன் கூறுகையில், "இதுவரை விடுதலைப் போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள், நிகழ்வுகள் மட்டுமே தபால் தலைகளில் அச்சிடப்பட்டு வெளிவந்தன. தங்கள் போட்டோவையே ஒட்டி தபால் அனுப்பும் இத்திட்டம் பள்ளி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவையில் மட்டும் இதுவரை 87 பேர், புகைப்படத்துடன் கூடிய தபால்தலை பெற்றுள்ளனர். ஆனால், இந்த திட்டத்தில் உயிருடன் இருப்பவர்கள் புகைப்படம் மட்டுமே பிரசுரிக்க முடியும். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வந்தாலும், தபால் துறையின் சேவைகள் மக்களின் நம்பகத்தன்மையை மேலும் வலுவூட்டுகின்றன" என்றார்.தபால் தலையில் தங்கள் புகைப்படம் இடம்பெற விரும்புவோர், இதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தலைமை தபால் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.இயலாதவர்கள் கோவை தபால்தலை சேகரிப்பு மையத்தில் நேரடியாக பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (வெள்ளை கலர் பின்னணியுடன் இருக்க வேண்டும்) மற்றும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல் இணைக்க வேண்டும். குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, பெற்றோர்களில் யாராவது ஒருவர் அடையாள அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி