தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் இளமாறன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா வது:ஆசிரியர்,
அரசு ஊழியர்களுக் கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களின்பெற்றோ ருக்கும் பயனளிக்கும் விதத்தில் மாற்றியமைத்திட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், நல்லாசிரியர் விருதுக்கான தொகையை உயர்த்தித் தர வேண்டும்.போலிச் சான்றிதழ் மூலம் பணிபுரிவோரைக் கண்டறிந்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், கல்வி கற்பதில் மாணவர்களிடம் பாகுபாடு ஏற்படாமல் தடுக்க, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தினைக் கலைத்துவிட்டு, மெட்ரிக் பள்ளி களின் பெயர்களை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் அல்லது சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி