மதிய உணவு திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது; ஐகோர்ட்டு தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2014

மதிய உணவு திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது; ஐகோர்ட்டு தீர்ப்பு


மதிய உணவு திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது என்று மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.மதிய உணவு திட்டம்மராட்டியத்தில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின்கீழ் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியை சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட ஆசிரிய, ஆசிரியைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இத்தகைய பணிகளால் தங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். மேலும், மதிய உணவு திட்ட நடைமுறைகளை செயல்படுத்த மாநில அரசு தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பெண்கள் அமைப்பின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆசிரியர்களை நியமிக்க கூடாதுஇந்த மனு நேற்று நீதிபதி அபய் ஒகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, வெளியிட்ட தீர்ப்பில் கூறியதாவது:–மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை ஆசிரியர்கள் மீது திணிப்பது, கல்வி சட்டப்பிரிவு 27–ன்கீழ் வன்முறை ஆகும். அதன்படி, ஆசிரியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு, நிவாரண உதவி வழங்குதல் மற்றும் தேர்தல் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள நியமனம் செய்யலாம். மதிய உணவு திட்டத்தால் நன்மைகள் இருக்கிறது. ஆனாலும் இது போன்ற ‘கல்வி அல்லாத பணிகளை’ ஆசிரியர்கள் மீது திணிப்பது முறையாகாது.

சுதந்திரமான அமைப்புஎனவே, மாநில அரசு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த, வல்லுனர்கள் குழு அடங்கிய ஒரு சுதந்திரமான அமைப்பை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் நகர்புறங்களில் அமைந்து உள்ள, பள்ளிக்கூடங்களுக்கு மதிய உணவு சப்ளை செய்யும் மைய சமையலறைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்வார்கள்.இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி