தமிழகத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் தலைமையில் செயல்படும் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்" என தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தெரிவித்து உள்ளது.
இதன் மாநில தலைவர், ஆரோக்கியதாஸ் கூறியதாவது: தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்) இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயம் தொடர்பாக, இன்று "ஸ்டிரைக்" நடத்த அழைப்பு விடுத்துள்ளது. "டிட்டோ ஜேக்" அமைப்பை வழிநடத்துபவர்கள், தி.மு.க., அனுதாபிகள்.
எனவே, இந்த ஸ்டிரைக்கில், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மற்றும் டி.இ.டி., தேர்வு மூலம் ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் பங்கேற்க மாட்டார்கள்.பணி ஓய்வு பெற்றும், பதிவு பெற்ற சங்கங்களின் நிர்வாகிகளாக உள்ளவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களது சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி