பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் குளறுபடி; பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2014

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் குளறுபடி; பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி


10ம் வகுப்பு பொது தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில், குளறுபடி நடந்துள்ளதால், பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ரமேஷ் அறிக்கை:"தற்போது நடைபெறும் 10 ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படையினர், தேர்வு கூட கண்காணிப்பாளர்கள் நியமனங்களில், பணியில், மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிகள் வழங்கப்படவில்லை.கடந்த 2006 மற்றும் அதற்கு பின், பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியேற்ற ஆசிரியர்களுக்கும், 10 ம் வகுப்பே போதிக்காமல், கீழ்நிலை வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மாதம் நடந்த 10 ம் வகுப்பு செய்முறை தேர்வின் போதும், இந்த குளறுபடி நடந்துள்ளது.தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களது பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் பணி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யுமாறு, கல்வி துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் தேர்வு பணி நியமனத்தில் பணி மூப்பு அடிப்படை கடை பிடிக்கப்படவில்லை. இது உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

5 comments:

  1. 2010 இல் பணியில் சோ்ந்தவரே துறை அலுவலராக திருநெல்வேலி கல்விமாவ்டத்தில் நியமிக்கபட்டுள்ளாா்

    ReplyDelete
  2. ellam onnuthan appuram junior senior athan trs velankamattanga

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் சீனியர் ஜுனியர் எல்லாம் பாக்கிரது தவறானது

    ReplyDelete
    Replies
    1. ரிட்டையர்டு ஆனா எவனும் திரும்பி பார்க்கமாட்டான்

      Delete
  4. ரிட்டையர்டு ஆனா எவனும் திரும்பி பார்க்கமாட்டான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி