தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, அரசின் ஆணை பெற்றவுடன் நடத்த தயார் - தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2014

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, அரசின் ஆணை பெற்றவுடன் நடத்த தயார் - தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி.


இன்று SSTA சங்கத்தை சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரை சந்தித்து 2013-14ஆம் கல்வியாண்டுகான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தமாறு வலியுறுத்தப்பட்டது.
அப்பொழுது தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன எனவும், அரசின் அனுமதிகாக காத்திருப்பதாகவும், அனுமதி வந்தஉடன் ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று உறுதியளித்தார்.இதுகுறித்து அரசு உடனடியாக உரிய ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி நாளை சங்க மாநில பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக சங்க மாநில பொறுப்பாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும் அதற்குள் தேர்தல் அறிவிப்பு வராமல் இருப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி