அரசு பள்ளி ஆசிரியரை கண்டித்து பள்ளி வாயில் கேட்டை பூட்டி கிராம மக்கள் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2014

அரசு பள்ளி ஆசிரியரை கண்டித்து பள்ளி வாயில் கேட்டை பூட்டி கிராம மக்கள் போராட்டம்.


சேத்தியாத்தோப்பு அருகே மதுராந்தகநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தினமும் காலையில் ஒரு ஆசிரியர் முன்னதாகவே பள்ளிக்கு வந்து பள்ளி வாயிலை திறக்க வேண்டும். நேற்று வர வேண்டிய ஆசிரியர் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் மாணவர்கள் வெளியில் நின்றிருந்தனர்.அப்போது அங்கு வந்த மற்றொரு ஆசிரியரிடம் அப்பகுதி மக்கள் இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால் அவர் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். தொடர்ந்து மற்றொரு ஆசிரியர் வந்த பிறகு பள்ளியின் கதவு திறக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி துவங்கும் நேரமாகியும் சில ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென பள்ளியின் வெளிப்புற வாயில் கேட்டை இழுத்து பூட்டி, உரிய பதிலளிக்காத ஆசிரியரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ஒரத்தூர் போலீசார் மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய தொடக்கக்கல்விஅலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பூட்டிய கேட்டின் கதவை திறந்து விட்டு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். பொதுமக்கள் பள்ளி வாயில் கேட்டை இழுத்து பூட்டி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பர பரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி