TNTET-2013: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ. டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2014

TNTET-2013: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ. டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது.


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ. டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில்,
தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார்.

இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந் தும் என வும் தெரிவித்தார். அதன்படி, டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரி யர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ஆம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது.இந்தப் பணி, 31ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்ட தாரி ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 முதல், 25ஆம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணி யை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது.

முதல் தாளுக்கு நடந் ததைப் போல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.

15 comments:

  1. Trb site la entha puthu thagavalum illai

    ReplyDelete
  2. Trb site la entha puthu thagavalum illai

    ReplyDelete
  3. ஆசிரிய நண்பர்களே CCE இறுதிபட்டியல் தயாரிக்க KALVI SMS அளித்துள்ள EXCEL முறை மிக அருமையாக் உள்ளது..பயன்படுத்தி பாருங்கள் மிக உபயோகமாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்புவரை மாணவர்களின் மூன்று பருவங்களின் மதிப்பெண்களையும் கொண்டு CCE இறுதிபட்டியல் ஒவ்வொரு ஆசிரியரும் தயாரிக்க வேண்டும்...அதற்க்கு இந்த KALVI SMS அளித்துள்ள EXCEL முறை உதவியாக இருக்கும்....

      Delete
  4. தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?
    மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி
    ‍--தின மலர் நாளேடு

    தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா' என, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுப் பணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முக்கிய பங்காற்றுகின்றனர். மாவட்டங்களில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அனைத்துப் பணிகளையும், குளறுபடி இல்லாமல் நிறைவேற்றுகிற வேலையை, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செய்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர்கள், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், பணியை கவனித்து வருகின்றனர். மற்றொரு பக்கம், 10ம் வகுப்பு தேர்வு துவங்கி உள்ளது. இந்நிலையில், ஏப்., 7 முதல், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்த உள்ளது. மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகள் இருந்தால் தான், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த முடியும் என, டி.ஆர்.பி., கருதுகிறது. இதற்காக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு, அதிகாரிகளை ஒதுக்கி தருமாறு, கல்வித்துறையிடம் கேட்டுள்ளது. டி.ஆர்.பி., நடவடிக்கைக்கு, மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 'தேர்வுப் பணியை கவனிக்கவே நேரம் இல்லாத நிலையில், கூடுதலாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணியையும் திணித்தால் எப்படி' எனவும், 'தேர்வுப் பணிகள் முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும்' எனவும், அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    ReplyDelete
  5. Those Maths / TET already CV attended candidates - Please visit TNTETMATHS.BLOGSPOT.IN and enter your marks, to the latest position.

    ReplyDelete
  6. Sri sir,dont mistake me,any information about paper 1 tet passed candidate as community wise including 5% relaxation passed candidates

    ReplyDelete
    Replies
    1. நாம் கணிக்கும் அனைத்துமே தோராயமானது தான் . சுரேஷ் sir சற்று பொறுப்போம் trb காலி பணி இடங்கள் லிஸ்ட் வெளிஈடும் வரை

      Delete
    2. Usha mam wt about Physics status.....How many candidates already cv Finished in physics any idea madam............

      Delete
    3. when will release cv date call letter for paper 2in trb website madam....

      Delete
    4. when will release cv date call letter for paper 2 in trb website madam....

      Delete
  7. டெட் வழக்குகள் என்ன ஆனது?

    ReplyDelete
  8. டெட் பற்றிய தகவல்கள் இருந்தால் தெரியபடுத்துங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  9. my weightage in physics is 71. BC.21.01.1982. any chance?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி