பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. மொழித்தாள்கள் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிந்தன. நேற்று கணக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக காரணிப்படுத்துதல், வர்க்கமூலம் பார்த்தல், கிராப் போன்றவை எளிதாக இருந்தாலும்,5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. கட்டாய கேள்வி மிகவும் கடினமாக இருந்தது.இது தவிர பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கேள்விகளில் பெரும்பாலான கேட்கப்படவில்லை.
இதனால் சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் இந்த முறை சென்டம் எடுக்க வாய்ப்பில்லாமல் போகும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களில் பலர் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாகவே தெரிவித்தனர்.
This comment has been removed by the author.
ReplyDelete