– It’s origin and it’s solution எனும் நூல்.
அதன் வழிக்காட்டுதலில் ரிசர்வ் வங்கி உருவானது .முதலில் கொல்கத்தாவில் தலைமையகம் அமைக்கப்பட்டு பின் மும்பைக்கு மாற்றப்பட்டது .தனியார் பங்குகளை கொண்டு இயங்கிக்கொண்டிருந்த அமைப்பு விடுதலைக்கு பின் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்தது.
நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது இந்த வங்கியே .தனி நபர்கள் இதில் கணக்கு வைக்க முடியாது .பர்மாவுக்கும் விடுதலைக்கு முன் வரை மத்திய வங்கியாக இதுவே செயல்பட்டது ;பாகிஸ்தானுக்கு கூட விடுதலைக்கு பின் பத்து மாதம் வரை வங்கியாக செயல்பட்டது.
இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவதில், உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.....
அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க கென்யாவில் இருந்து கிளம்பி செல்லும் பொழுது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர் தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு வந்தார் .
மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற ஆவல் உந்தித்தள்ளியது .மூன்றில் ஒரு பங்கு காடுகள் ஒரு காலத்தில் கென்யா முழுக்க போர்த்தி இருந்தன .நிலைமை இவர் வந்த பொழுது தலைகீழ் மூன்று சதவிகிதத்துக்கு போயிருந்தது . பெண்கள் தேசிய இயக்கத்தில் சேர்ந்த இவர் கிரீன் பெல்ட் இயக்கத்தை ஆரம்பித்தார் .
மரத்தை வெட்டினால் பணம் என அரசாங்கம் சொன்ன பொழுது மரத்தை நட்டால் பணம் என முழங்கினார் .மக்களின் வீடுகளுக்கு போய் பேசினார் ;பெண்களை தன் பின்னே அணிவகுக்க செய்தார் ; வனத்துறை உதவியது . ஒரு வீட்டில் கணவன் மனைவி என இரண்டு கன்றுகள் என ஆரமபித்த இயக்கம் இருபத்தைந்து ஆண்டுகளில் நான்கு கோடியே முப்பது லட்சம் கன்றுகளை நாட்டு பெரும்பாலும் அவை பராமரிக்கப்பட்டு பசுமைக்கோலம் பூண்டது நாடு
அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு 2004 இல் வழங்கப்பட்டது .அவரின் செயல்களை இரண்டாவது விடுதலைப்போர் என வர்ணிக்கிற அளவுக்கு சாதித்த மரங்களோடு மந்தகாச மொழி பேசிய அவரின் பிறந்தநாள் இன்று
1957 இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1973 புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniakஆகியோரால் தொடங்கப்பட்டது.
2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற முற்றிலும் இலவசமான மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.
இன்றைக்கு வழக்கு விசாரணை பற்றிய தகவல்கள் ஏதும் காணாமே.....
ReplyDeletehai sri sir when will start Paper2 CV? and how many vacancy still in physics....
ReplyDeleteஉறுதியாக 1000க்கு மேல் சென்ற ஆண்டின் மீதிப்பணியிடங்கள் உள்ளன...இந்த ஆண்டு எவ்வளவு என்று தெரியவில்லை...
Deleteஅரசு அறிவித்தபடி ஏப்ரல் 7 ல் நடக்கும் என்று தான் எதிர்பாக்கபடுகிறது...இதைப்பற்றிய மற்று அறிவிப்பு ஏதும் இதுவரை கல்விதுறை நபர்களுக்கு வரவில்லை என்று தான் நினைகிறேன்...
SRI sir plz English Paper 2 vacant tell me.
Deleteஉங்களுக்கு தேவையான தகவல் இந்த வலைத்தளமுகவரியில் கிடைக்கு சென்று பாருங்கள்.....
Deletehttp://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html
SRI sir Neengal kuripitta valaithalathil ethum enaku katavillai therinthaal sollungal mudiyavitaal parava illai. Thank You For Your Reply.
Deletehttp://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html
Deleteஇதை அப்படியே copy&past செய்து enter செய்தால் அணைத்து பாடங்களுக்கான தகவல்களும் கிடைக்கும்...
ஆங்கிலத்திற்கு சென்ற ஆண்டு மீதி பணியிடங்கள் 1825
SRI sir Thank You.
DeleteEnglish Paper 2 BC 77wtg chance irukka.
நண்பரே நானும் உங்களை போல்தான் இந்த அரசிடம் இருந்து ஏதாவது தகவல் கிடைக்காதா என்று கண்களை மூடாமல் காத்துகொண்டிருக்கிறேன்....இங்கு பலரின் நிலையம் அவ்வாறு தான்..
Deleteஆனால் 75 க்கு மேல் இருப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் இதுவும் அனைவரும் அறிந்ததே....
TRB காலி பணியிடங்கள் பற்றிய விவரங்களை படவாரியாகவும்,இனவாரியாகவும் அறிவிக்கிறோம் என்று சொன்னார்கள் அதையாவது சீக்கிரம் செய்தால் பரவாஇல்லை..இல்லை இதிலும் மிக விரைவில் னு ஒரியா வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி காலம் கடத்துவார்களா என்று தெரியவில்லை...இதை சொல்லி கூட பலநாட்கள் ஆகிறது....
Dinamum TET Case patri kuripituvantha KALVI SEITHIyalar INDRU maranthuvitaro Nammai .
ReplyDeleteஇன்றைக்கு வழக்குகளின் வரிசையில் கடைசியாக பட்டியலில் 213 க்கு மேல்தான் உள்ளது...இன்று விசாரணைக்கு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்....
Deleteஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம்...
ReplyDelete16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
Engliah Paper 2 BC 77wtg ku chance irruka
ReplyDeleteஇன்றைய வழக்கு விசாரணைக்கு வந்ததா....வந்திருந்தால் இன்று என்ன காரணம் கூறப்பட்டது,(அ)எப்போது தள்ளிவைக்கப்பட்டது என்று தெரிந்தவர்கள் கூறவும்....
ReplyDelete