அறிவியலில் தவறான கேள்வி : 3 மதிப்பெண் வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

அறிவியலில் தவறான கேள்வி : 3 மதிப்பெண் வழங்க உத்தரவு.


பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், இரு கேள்விகள், தவறாக கேட்கப்பட்டதற்காக, அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 7ல்,பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் பகுதி, கேள்வி எண் 14ல், "ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம், 1/3 எனில், அந்த ஆடியின் வகை என்ன...' என, கேட்கப்பட்டது. இதற்கு, "குவிலென்ஸ்' என்பது விடை. ஆனால்,"குழிலென்ஸ்' என்ற வேறொரு விடையும் உள்ளது. இந்த கேள்விக்கு,எந்த பதிலை எழுதி இருந்தாலும், அதற்கு, ஒரு மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. இரு மதிப்பெண் பகுதி, தமிழ்வழி கேள்வி எண் 29ல், "வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை...' என்ற கேள்விக்கு, ஆங்கில வழி கேள்வித்தாளில், "பயோ - பியூல்' என, கேட்டு, தமிழ்வழி கேள்வித்தாளில், "உயிரி எரிபொருள்' என, கேட்காமல் பொதுவாக கேட்டுவிட்டனர்.இதனால், மாணவர்கள், "பெட்ரோல், டீசல்' என, விடை எழுதினர். இதனால், மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், இந்த கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவு விட்டுள்ளதாக, பாட ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி