வி.ஏ.ஓ., தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2014

வி.ஏ.ஓ., தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்.


ஜூன், 14ம் தேதி நடக்க உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு,இணையதளம் வழியாக, இதுவரை, ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) வட்டாரம் தெரிவித்தது.

கடைசி தேதியான வரும், 15க்குள், மேலும் 5 லட்சத்திற்கும், அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.தமிழக வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 17ல், வெளியானது. அன்றிலிருந்து, வரும் 15 வரை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமானோர் போட்டி:

இந்த வேலைக்கு, 10ம் வகுப்பு கல்வி தகுதி என்பதால், வழக்கம் போல், ஏராளமானோர் போட்டி போட்டு, விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 15 நாளில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்தது. கடைசி நாளான, வரும் 15க்குள், மேலும், ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், அத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனவே, மொத்த விண்ணப்பதாரர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் - 4:

கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் குரூப் - 4 தேர்வு நடந்தது. இதன் முடிவு, சமீபத்தில் வெளியானது. இளநிலை உதவியாளர், 3,704, தட்டச்சர், 1,843,சுருக்கெழுத்து தட்டச்சர், 308 என, 5,855 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம் 24 முதல், கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 348 பேருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது.

10 comments:

  1. dear frnds,
    VAO exam finish paniya pinadi thaan matra examku apply pananumnu irupathaka sonarkal. Unmaiya? therinthaal solunkal.

    ReplyDelete
  2. G 4th overall rank 6198 community 90 SCA. Cv &coun absent an vaippu irukka

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. G 4th 2.4.2014 , appointment 266. Balance 3096. SCAG 1 appoint only

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Samipathil velieda group iv ku.1.4.2014 muthal cv &counselling nadaipeddu varukirathu athan details

    ReplyDelete
  8. Anybody know the result date of tnpsc group3 exam conducted on August 3 2013 for the post of junior inspector of co-operatives?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி