மே 9-ல் பிளஸ் 2, மே 23-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2014

மே 9-ல் பிளஸ் 2, மே 23-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.


மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியிலும் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 8.45 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய தேர்வாக பிளஸ் 2 பொதுத்தேர்வு கருதப்படுகிறது.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கியது ஏப்ரல் 9-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்களைச் சேர்த்து ஏறத்தாழ 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். இத்தேர்வின் முடிவு மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி