மக்களவைத் தேர்தலில் பணியாற்றும் பெண் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பெண் காவலர்களை நியமித்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளது.திருச்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டணியின் மாநகரச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி நகர சரகத்திற்குள்பட்ட நிதியுதவி பெறும் பள்ளிகளுóக்கு 2007,08-ம் ஆண்டுகளுக்குரிய பள்ளி பராமரிப்பு மானியம் வழங்கப்படசவில்லை. இதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.85 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் ஜின்னா தெரு நகராட்சித் தொடக்கப்பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு கூட்டணியின் மாநகரத் தலைவர் ம. ஜேம்ஸ் தலைமை வகித்தார். திருச்சிமாவட்டச் செயலர் ஜோ. ஆல்பர்ட் தாஸ் முன்னிலை வகித்தார். மாநகரச் செயலரும்,மாநிலச் செயற்குழு உறுப்பினருமான சே. நீலகண்டன் சிறப்புரையாற்றினார்.மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அமல் ஜேசுராஜ், பொறுப்பாளர்கள் சிராஜுதீன், ரெக்ஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். துணைச் செயலர் அ.பெர்ஜித்ராஜன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி