தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.
ஒளி ஏற்றுதல் விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக 7ம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.4ம் வகுப்பு மாணவன் ரஞ்சித் ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்றார்.சுப நிகழ்ச்சியின் ஆரம்பமாக கடவுளை நினைத்தல் என்பது மரபு.அவ்வண்ணம் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி தனம் தனக்கே உரிய மெல்லிய குரலில் அபிராமி அந்தாதி பாடினார்.நிகழ்ச்சி தொடங்கியது.வந்தோரை இன்முகத்துடன் வாழ்த்துவது தமிழர் பண்பாடு.அதனை செம்மைபடுத்தி ஏழாம் வகுப்பு மாணவன் நடராஜன் சர்வ சமய வாழ்த்துக்கள் பாடலை பாடினார்.திருவண்ணாமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது தீபம் தான்.அதனை நினைவு கூறும் விதத்திலும்,எட்டாம் வகுப்பு படித்து பிரியா விடை கொடுக்கும் மாணவியர் கல்விகடவுள் சரஸ்வதியை வணங்கி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை 8 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் உதவியுடன் கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.8ம் வகுப்பு மாணவி அபிநயா உறுதி மொழி வாசிக்க 8ம் வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு ஒளியை அப்படியே அந்த பாரம்பரியம் மாறாமல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுத்தனர்.
7ம் வகுப்பு மாணவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.7ம்வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவி சொர்ணாம்பிகா ஏற்புரை வழங்கினார்.தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கி முதன்மை மேலாளர் கவிஞர் சபாரெத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பாரம்பரியம் மிக்க இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..விழாவினை ஆசிரியை முத்து மீனாள் தொகுத்து வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வ மீனாள் செய்திருந்தார்.3ம் வகுப்பு மாணவன் கார்த்திக் ஆங்கிலத்தில் நன்றி கூறினார்.வந்திருந்த பெற்றோரும்,8 ம் வகுப்பு மாணவ,மாணவியரும் பிரியா விடை நிகழ்ச்சியான ஒளி ஏற்று விழாவில் ஆனந்த கண்ணீர் மல்க விடை பெற்றனர்.

1) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ ,மாணவியர் பிரியா விடை பெறும் விழாவில் ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவிகளிடம் வழங்கிய போது எடுத்த படம்.
Thanks & Regards,
L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam School,
Devakottai.
9786113160
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி