சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை. - kalviseithi

Apr 29, 2014

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை.


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கும் நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.கலையரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கோடைக் கால விடுமுறையில் (மே மாதம் 1- முதல் ஜூன் மாதம் 1-ஆம் தேதி வரை) வழக்கு விசாரணைக்கான நீதிபதி அமர்வுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அதில்,மே 1 முதல் 11-ஆம் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் தலைமையில் அமர்வு வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெறும். அதன் பிறகு இருவரும் தனியாக வழக்குகளை விசாரணை செய்வர். நீதிபதி சி.எஸ்.கர்ணன் குற்றவியல் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வார். மே 12 முதல் 18- ஆம் தேதி வரை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார்,டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அமர்வு வழக்குகளையும்,நீதிபதி கே.பி.கே.வாசுகி குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வர்.மே 19 முதல் 25-ஆம் தேதி வரை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,கே.ரவிச்சந்திர பாபு ஆகியோர் அமர்வு வழக்குகளையும்,நீதிபதி ஆர்.மகாதேவன் குற்றவியல் வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.மே 26 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நீதிபதிகள் அருணா ஜெகதீசன்,எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அமர்வு வழக்குகளையும்,நீதிபதி ஜி.சொக்கலிங்கம் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.

மேலும்,திங்கள்கிழமை,செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கலும்,புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கு விசாரணைகளும் நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி