சென்னை மாவட்ட அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு மார்ச்'14 ஊதியம் விரைவில் பெற்று தர வழிவகுத்த த.ஆ.கூ பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்களுக்கும், இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாராட்டு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2014

சென்னை மாவட்ட அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு மார்ச்'14 ஊதியம் விரைவில் பெற்று தர வழிவகுத்த த.ஆ.கூ பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்களுக்கும், இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாராட்டு.


சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பள்ளிகளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து 2014-2015 நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு வழங்காததால்
மார்ச் மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்க முடியாமல், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாயினர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட போது, தொடக்க கல்வி இயக்குனரகம் மூலம் மாவட்ட வாரியக நிதி ஒதுக்காததால் தங்களால் ஆணை ஏதும் வழங்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமைநிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார், சார்ந்த சங்க பொதுச் செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சனையை 02.03.2014 மதியம் 01.00 மணியளவில் எடுத்து சென்றார். உடனே பொதுச்செயலாளர் அவர்கள் நமது தொடக்க கல்வி இயக்குநர் முனைவர். இளங்கோவன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இப்பிரச்சனைசார்பு முறையிட்டார்.

தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் உடனே மாவட்ட நிர்வாகத்தை அழைத்து பேசி, உடனே நிதி ஓதுக்கீடு வழங்கும் பணியை இயக்குனரகம் மூலம் முடுக்கி விட்டு மாலை 04.00 மணியளவில் சென்னை மாவட்ட நிர்வாகத்தினருக்கு நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.. பின்பு மாலை 06.00 மணிக்குள் சென்னை மாவட்டத்தில் உள்ள பத்து ஓன்றியங்களுக்கும் நிதி ஒதுக்கீடு ஆணை மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது.. தொடக்க கல்வி இயக்குனரகத்தில் இருத்து பொதுச் செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி அவர்களை தொலைப்பேசியில் அழைத்து அனைத்து ஆசிரியர்களும் ஊதியம் பெற எடுக்கபட்ட நடவடிக்கையின் விபரத்தை தெரிவித்தனர். இயக்குநரின் துரித நடவடிக்கைக்குதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமிதமது நன்றியினை தெரிவித்தார்.

ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை களைய முனைப்புடன் செயலாற்றிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் முனைவர்.இளங்கோவன் அவர்களுக்கு சங்க வேறுபாடின்றி சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள் தமதுநன்றியினை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி