சிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2014

சிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு.


மாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம் தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது.
'மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர் வேலை வாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு, சிறப்பு டி.இ.டி., தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கு, தமிழக அரசே, தேர்வு குறித்து, 40 நாள் இலவச பயிற்சி அளிக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, சிறப்பு டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலம் முழுவதும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து, இலவச பயிற்சியை அளித்து வருகிறது. வரும், 15ம் தேதியுடன், பயிற்சி முடிகிறது. 700க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், பயிற்சியில் பங்கேற்று உள்ளனர். போட்டி தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க இருந்த நிலையில், தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 32 மாவட்டங்களிலும், 40 மையங்களில், சிறப்பு தேர்வு நடக்கிறது.

1 comment:

  1. ஒரு TET தேர்வு கூட இது வரை சொன்ன தேதியில் நடை பெற வில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி