காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2014

காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


காலியாக உள்ள இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை ஏப்ரல்
/ 5/2014க்குள் சமர்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

21 comments:

  1. இதை சமர்ப்பித்த உடன் அடுத்து பணிநியமனம் தான்...

    ReplyDelete
    Replies
    1. பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day - ICBD)
      1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

      Delete
    2. sri s ir are you sure about it

      Delete
    3. சார் இது வெறுப்பில் சொன்னது....இவங்க இதுவரை பத்து முறைக்கு மேல் கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள் ஆனால் முடிவை மட்டும் சொல்லவில்லை.....

      Delete
    4. sri sir i am also asked you in the same way sir thank you for your reply

      Delete
  2. Sri sir, tnpsc group 4 eppo ungalukku verification?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு போதிய மதிப்பெண் இல்லை நண்பரே...

      Delete
  3. இதே நாளுடன் தொடர்புடைய சில நிகழ்வுகள்.....

    1881 -விடுதலை போராட்ட வீரரும் / இலக்கியவாதியும் / தமிழ் சிறுகதைகளின் தந்தை என அழைக்கப்பட்டவருமான…வ.வே.சுப்பிரமணியம் (வ.வே.சு அய்யர்) பிறந்ததினம் இன்று...
    ஏப்ரல் 2(1984) - இந்தியரான ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 என்ற விண்கலத்தில் பயணித்து,விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற தினம் இன்று....
    ஏப்ரல் 2 (2011) டோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற தினம் இன்று..
    ஏப்ரல் 2 (1967) ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் பிறந்தநாளான இதை பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் என்று கொண்டாடி வருகிறோம்...

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் 2: ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம். இன்று

      ஆட்டிஸம் (Autism)... பரவலாகக் கவனம் பெறாத, நரம்பு மண்டல நோய். உணர்வுகள் வெளிக்காட்டாத முகம், நோக்கம் எதுவுமற்ற பார்வை, சம்பந்தமில்லாத செயல்பாடுகள் என்று ஆட்டிஸ குழந்தைகளையும், பெரியவர்களையும் நாம் அவ்வப்போது கவனித்திருக்கலாம். 'உலக அளவில் ஆயிரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள நோய் இது' என்கிறது ஆய்வுத் தகவல். ஆனால், அதற்கான சிகிச்சை மையங்கள், தேவையை ஈடுகட்டும் விதத்தில் இல்லை என்பது, வருத்தத் தகவல்.
      அதேசமயம்... ''அன்பு மற்றும் ஏற்றுக் கொள்ளல்... இது ரெண்டும்தான் ஆட்டிஸ நோயால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம் கொடுக்கும் முதல் மற்றும் முக்கிய மருந்து!''

      Delete
  4. வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர்) ஏப்ரல் 2, 1881 பிறந்தார்...
    இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ளதிருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர்தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
    சென்னையில் வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார்.
    மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தியாவர் வவேசு தான்...
    மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.

    திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

    குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
    இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
    மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, "கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
    பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.

    அவருடைய மறைவும் வீரமாகவே இருந்தது

    தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா" என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4ல் அணைந்தது.

    ReplyDelete
  5. How many times they are taking vacancy list.idiots....

    TET la 90 marks above score panni, CV mudisi posting ku ready ah erukkura youth ku vacancy list gathering power kodungada killattu perusungala.within 24hrs la 100% correct vacancy list submit panrom.u people ready for dis challenge?

    ReplyDelete
    Replies
    1. ha ha ha ha super madam. nethiyadi.

      Delete
    2. Then Wat madam? How many times this news we r hearing.am correct or wrong? Say from heart...

      Delete
    3. இவங்க கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இருக்கும் என்று நிதால் அதுவே தவறு இதுவரை பத்து முறைக்கு மேல் கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள்....அதிலும் ஒவ்வொரு பள்ளியிலும் fixation என்று ஆகஸ்ட் மாதத்திலே அணைத்து விவரங்களும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளும் தகவல் ஒன்றே போதாதா...இதில் தனியாக வேறு ஆயிரத்தெட்டு கணக்கெடுப்பு வேண்டுமா என்ன...

      Delete
  6. sir B.Ed., computer science padichavagaluku yathanum vallai vaippu yullatha sir

    ReplyDelete
  7. Then Wat sir? How many times this news we r hearing.am correct or wrong? Say from heart..

    ReplyDelete
  8. பணி நியமனம் எப்போது

    ReplyDelete
    Replies
    1. முதலில் கேட்க்க வேண்டிய கேள்வி பணிநியமனம் செய்வீர்களா?இல்லை எல்லோருக்கும் அல்வா வா என்று தான் சார்

      Delete
  9. vacancy increase aka chance irukku so 90 above eduthu cv mudicha canditate ku competition kuraya vaipu iruku am i right? any one tell me

    ReplyDelete
  10. How u will tell this friend tell me plz.

    ReplyDelete
  11. How u will tell this friend tell me plz.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி