எல்கேஜி புத்தகத்தில் சூரியன் : தேர்தல் ஆணையம், தொடக்கக் கல்வித் துறைக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2014

எல்கேஜி புத்தகத்தில் சூரியன் : தேர்தல் ஆணையம், தொடக்கக் கல்வித் துறைக்கு உத்தரவு


எல்கேஜி பாடப்புத்தகத்தில் எஸ் என்ற ஆங்கில வார்த்தையைக் குறிக்க வரையப்பட்டுள்ள கண்ணாடி அணிந்த சூரியன் படத்தை நீக்குவது தொடர்பாக
பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எல்கேஜி பாடப்புத்தகத்தில் உதய சூரியன் படம், கட்சியினை நினைவு கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என்றும், அதனை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 7ம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தொடக்கக் கல்வித் துறை இயக்குநருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி