Flash News: சுனாமி எச்சரிக்கை- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:ரிக்டர் அலகில் 8.2 ஆக பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2014

Flash News: சுனாமி எச்சரிக்கை- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:ரிக்டர் அலகில் 8.2 ஆக பதிவு.




சிலியின் வடக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 8.2 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து கடற்கரை நகரமான இகிக்யூவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட 45 நிமிடங்களில் முதல் சுனாமி அலை தாக்கியதாக சிலி கடற்படை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி சிலி அரசு உத்தரவிட்டுள்ளது.சிலி மட்டுமில்லாமல் ஈக்வடார், கொலம்பியா, பனாமா, கோஸ்டா ரிகா மற்றும் நிகாராகாநாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி