நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் வினாத்தள் தொடர்பாக ஆசிரியர்களின் விடைகளையும் விளக்கங்களையம் பார்க்கும் போது வேதனையாகத்தான் உள்ளது.
தற்பொழுது கேட்கப்பட்ட கேள்விகள் அல்லாமல் கேட்கப்படாத புத்தகத்தில் உள்ள இன்னும் பல கேள்விகள் விவாதத்திற்குறியனவாகவே உள்ளன். எனவே தவறான கேள்விகளை சரியாக மாற்றாமல் அவற்றிர்க்குரிய விடைகளில் விவாதத்தில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்.
மேலும் மற்ற படங்களை ஒப்பிடும்போது அறிவியல் பாட வினாத்தாள் நியாயமற்றதாக உள்ளது. ஒரு வார்த்தையில் விடை எழுதி விட்டு இரண்டு மதிப்பெண் வழங்குவது என்பது எந்த விதத்தில் நியாயம்.எனவே அறிவியல்பாட வினாத்தாளின் வடிவமைப்பையே மாற்றினால் நன்றாக இருக்கும்.
வடிவம்
1. சரியான விடையை தேர்ந்தெடு 10*1=10
2. பொருத்துக 5*1= 5
3. இரு மதிப்பெண் வினா (16 பாடங்கள்) 16*2=32
(வரையறை,கரணம் கூறு, கணக்கு போன்று )
4. கொடுக்கப்பட்ட படங்களை கண்டறிந்து
குறிப்பெழுதுதல் 2*2=04
5. கேட்கப்பட்ட படங்களை வரைந்து பாகங்களை
குறித்தல் 2*2=04
6. விரிவான விடையளி 4*5=20
கூடுதல் 75
ஆசிரியர்கள் ஆமோதிப்பீர்களா?
நன்றி.
அன்புடன்
த. சரபோஜி
பட்டதாரி ஆசிரியர்(அறிவியல்)
அரசு பெ மே.நி.பள்ளி,
மணல்மேடு. 609202
E-Mail ID : tsaraboji@yahoo.in
Fact fact fact. I am maths teacher.
ReplyDeleteஇதை இரண்டு பகுதிகளாக பார்த்தால் முதல் பகுதி மிகவும் நியாயமானதே! குழப்பமான கேள்விகளுக்கு தெளிவான விடை அறிவிக்கப்படவேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். இரண்டாவது பகுதியில் நான் ஒப்பவில்லை. அதாவது ஒரு வார்த்தைக்கு இரண்டு மதிப்பெண் என்பது தவறல்ல! அறிவியலில் குறைந்த பட்சமாக வெற்றி பெறுவது எளிது எனினும் 75 க்கு 75 பெறுவது அவ்வளவு எளிதல்ல!
ReplyDeleteஅறிவியல் பாடத்திட்டமே மாற்றப்பட வேண்டும்.சரியான அளவில் பாடங்களும் விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை.
ReplyDeleteஇதனால் மேல்நிலை கல்வியில் அறிவியல் பிரிவு மாணவர்கள் திணறுகின்றனர். அறிவியலை பொறுத்த வரை பாடத்திட்டமும் வினாத்தாள் வடிவமைப்பும் மாற்றப்பட வேண்டும்.
அறிவியலும் கணிதமும் மற்ற பாடங்களை போல் அல்ல. படைப்பாற்றல் மிக்க மாணவர்களை உருவாக்குபவை. எனவே இதில் மாற்றம் கண்டிப்பாக தேவை.