மே 13 இன்று தமிழ் கவிஞர் தாராபாரதி, மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆர். கே. நாராயண் ஆகியோரின் நினைவு தினம்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2014

மே 13 இன்று தமிழ் கவிஞர் தாராபாரதி, மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆர். கே. நாராயண் ஆகியோரின் நினைவு தினம்....

 தமிழ் கவிஞர் தாராபாரதி

வெறுங்கை என்பது மூடத்தனம்உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற தாராபாரதி தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். அவரின் நினைவு தினம் இன்று...  


திருவண்ணாமலை மாவட்டம் குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் துரைசாமிபுஷ்பம் அம்மாள். 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 - 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

இவரது படைப்புக்கள்

புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை), விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம், கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்...
தன்பாட்டுத்திறத்தால் மக்களை விழிப்புணர்வூட்டிய கவிஞர் தாராபாரதியின் சிறப்பிதழாக இந்த இதழ் மலர்ந்துள்ளது. வெறுங்கை என்பது மூடத்தனம்உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்கிற பாடல் பலரது நெஞ்சிலும் நின்று வளர்த்தெடுப்பவை.
  

ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர்

 ஆர். கே. நாராயண் 


'ஆர்.கே.நாராயண்என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்டவர் ஆர்.கே.நாராயணன். அவர் பெயரைச் சொன்னாலே அவர் எழுத்தில் வெளிப்பட்ட 'ஹ்யூமர்எனப்படும் மெல்லிய நகைச்சுவைதான் நினைவுக்கு வரும். சென்ற அறுபதுகளிலேயே பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களில் அவருடைய படைப்புகள் தகுந்த இடம்பெற்றன.
தன்னுடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டதில் அவருக்கு முழு மகிழ்ச்சி இல்லைதான்.

ஆர்.கே.நாராயணன் "சாதாரணமாக எழுதியதாக"க் குறிப்பிட்டதும் 1935ஆம் ஆண்டில் வெளியானதுமான அவருடைய முதல் நாவல் 'சுவாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்'(Swami and Friends)

சிறுவர் உலகத்தைசிறுவர்களின் பார்வையிலிருந்தே சித்தரிக்கும் கதைசொல்லலினூடுஅதற்குப்பிறகு அவர்கள் ஆகவுள்ள பெரியவர்களின் உலகத்தையும் மால்குடியைக் களமாகக் கொண்டு ஆர்.கே.நாராயணன் நுட்பமாக இந்த நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்


அனைவரும் அறிந்த “”மால்குடி டேஸ்”” என்ற ஒரு காலத்தால் அழியாத நாவலை கொடுத்தவர்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி