இங்கிலாந்தில் ஏலம் போனது திப்பு சுல்தானின் மோதிரம் ரூ.1.42 கோடிக்கு விற்பனை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

இங்கிலாந்தில் ஏலம் போனது திப்பு சுல்தானின் மோதிரம் ரூ.1.42 கோடிக்கு விற்பனை...







இந்திய சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தானின் மோதிரம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.42 கோடிக்கு விற்பனையானது. இந்தியாவில் 18ம் நூற்றாண்டில் மைசூரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால் திப்பு சுல்தான் மட்டும் பிரிட்டிஷ் படைகளான கிழக்கிந்திய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பிரிட்டிஷ் படைகளை போலவே தனது படையிலும் பீரங்கி உள்ளிட்ட நவீன போர்க்கருவிகளை வைத்திருந்தார்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக தனது படைகளை கொண்டு திப்பு சுல்தான் போர் நடத்தினார். 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கபட்டணத்தில் போர் முடிவுக்கு வந்தது. அதில் திப்பு சுல்தான் போர்களத்தில் வீரமரணம் அடைந்தார். அப்போது அவரை அடையாளம் காண்பதற்காக அவரது உடலில் இருந்து திப்பு சுல்தான் அணிந்திருந்த மோதிரத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இந்த மோதிரத்தில் ராம் என்று பொறிக்கப்பட்டிருந்தது. தங்கத்தில் 41.2 கிராம் எடையில் செய்யப்பட்டிருந்தது.

இது லண்டனில் உள்ள பழம்பொருட்கள் அருங்காட்சியகத்தில் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது இது ரூ.1.42 கோடிக்கு ஏலம் போனதாக அருங்காட்சிய ஊழியர்கள் தெரிவித்தனர். தனது தந்தை ஹைதர் அலிக்கு பிறகு 17 ஆண்டுகள் மைசூரின் மன்னராக வெற்றிகரமாக ஆட்சி நடத்தினார் திப்பு. முஸ்லிம் மன்னராக இருந்த போதிலும் அவரது மோதிரத்தில் ராம் என்று பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாகவே மறைத்து வைக்கப்பட்டுள்ள அவரது மோதிரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

4 comments:

  1. SRI sir sendra aandu NAAN ENATHU kudumbathaarudan MYSORE sendru vanthome TIPPU MUSEUM paarthome AVAR porin pothu AVAR aninthiruntha udaigalai paarthen romba santhoshamaaga irunthathu. ivaudaya intha sirapuku NAAM ONDRUME illai. HE IS A 18th CENTURY ONE OF THE GREAT MAN.
    THANK YOU FOR YOUR GREAT COLLECTION SWEET MEMORIES.

    ReplyDelete
  2. நன்றி... ரவி சார் .. ஆனால் நான் இதை பதிவிட்டதற்கு காரணம் அவர் மோதிரத்தில் "ராம்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இதைப்பார்த்து தான் எனக்கு தெரியும் அதனால் தான் மற்றவர்களில் தெரியாமலிருப்பவர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்ற தகவலுக்காக பதிவிட்டேன்.. அநேகமானவர்களுக்கு இவரின் பீரங்கியும் அவருடைய வெள்ளையனை கொன்று வதைக்கும் இசைக்கும் புலியை பற்றியுமே தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்...

    ReplyDelete
  3. Sri sir tet news onnum kanom night toda night a posting a

    ReplyDelete
  4. நன்றி ஸ்ரீ

    இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவேண்டும்.
    எத்தனையோ வேண்டாத செலவு செய்யும் போது, இந்தியாவே மோதிரத்தை ஏலத்தில் எடுத்திருக்கலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி