பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு: மே 16 வரை விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2014

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு: மே 16 வரை விண்ணப்பிக்கலாம்.


பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணைத்தேர்வு எழுத, மே16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

அவரது உத்தரவு:

கடந்த மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுத வராதவர்கள், வரும் ஜூன், ஜூலையில் நடக்கும், பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு எழுத, தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள், அவர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும், மே 12 முதல் 16 வரை, பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென, தனி விண்ணப்பம் கிடையாது. தேர்ச்சி பெறாத, தேர்வு எழுத முடியாத ஒவ்வொரு பாடத்திற்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; அதனுடன் இதரக் கட்டணம், 35 ரூபாயை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் செலுத்த வேண்டும். இதுதவிர, 50 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு தேதி மற்றும், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி, பின் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி