மே.2-ம் தேதி முதல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 2014-15-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம்வருகிற மே.2-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் ஜூன் 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.1500 ஆகும். அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி மற்றும் அரசு விதிமுறைகள்இடஒதுக்கீடு முறையில் நடைபெறும். விண்ணப்பப் படிவங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பணம் செலுத்துமிடம்(கேஷ் கவுன்ட்டர்) மற்றும் அனைத்து தொலைதூரக்கல்வி மையபடிப்பு மையங்களிலும் கிடைக்கும். மேலும் தகவல்கள் பெற www.annamalaiuniversity.ac.in என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி