விபத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்கஉத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2014

விபத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்கஉத்தரவு.


விபத்தால், 70 சதவீதம் ஊனமடைந்த, தமிழக பள்ளி மாணவிக்கான, இழப்பீட்டுத் தொகையை, 18.22 லட்சத்தில் இருந்து, 30.93 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவி மேகலா. இவர், சாலை விபத்து ஒன்றில், 70 சதவீதம் ஊனமடைந்தார். இதையடுத்து, இவரது சார்பில், விபத்து இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், 6.46 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவி மேகலாவுக்கான, இழப்பீட்டுத் தொகையை, 18.22 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மாணவி தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.அப்பீல் மனுவை விசாரித்த, நீதிபதி ஜியான் சுதா மிஸ்ரா தலைமையிலான, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், பிறப்பித்த உத்தரவு: மாணவி மேகலா, புத்திசாலித்தனமானவராக இருந்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வில், முதல் ரேங்க் பெற்றுள்ளார். அவர் உயர் கல்வியோ அல்லது தொழில் கல்வியோ பயின்றிருந்தால், தனியார் நிறுவனத்திலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ, நல்ல வேலைவாய்ப்பு பெற்றிருப்பார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் அமைந்திருக்கும். ஆனால், விபத்தில், நிரந்தர ஊனம் அடைந்ததால், இந்த வாய்ப்புகளை எல்லாம், அவர் இழந்துள்ளார்.

எனவே, அவருக்கான இழப்பீட்டுத் தொகையை, 30.93 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு, நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி