44 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2014

44 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு.


தமிழகத்தில் 44 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் தற்காலிக பணியிடங்களைபள்ளிக் கல்வித் துறை நீட்டிக்காததால் ஊதியமின்றி தவிக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள¢ளிகள் உயர்நி லைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் ஆண்டு தோறும் அரசால் தரம் உயர்த்தப்படுகிறது. இப்பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் பணியிடங்களை அரசு தற்காலிகமாக உருவாக்கும். இந்த பணியிடங்களில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் நிரந்தரமானவர்கள் என்ற போதிலும் அவர்கள் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்களை அரசு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக வைத்துள்ளது. இந்த பணியிடங்கள் 2 மாதம், 3 மாதம், 6 மாதம், ஓராண்டு என்ற அடிப்படையில் நீட்டிக்கப் பட்டு, விரைவு சம்பள பட்டுவாடா ஆணை வழங்கப்படும்.இந்நிலையில் தமிழகத்தில் தரம் உயர்த்தப் பட்ட பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுந¤லை பட்டதாரி ஆசிரியர்கள் 44 ஆயிரம் பேருக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை கிடைக்க வில்லை. இவர்கள் பணியாற்றி வந்த பணியிடங்கள் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் காலாவதியாகி விட்டன. இந்த பணியிடங்களை நீட்டித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால் 44 ஆயிரம் ஆசிரியர்கள் ஏப்ரல் மாத ஊதியம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

3 comments:

  1. http://www.sarkarinaukricareer.com/2014/05/tntet-application-form.html?m=1
    Please visit this page

    ReplyDelete
  2. சோறு போட முடியாத அரசை கலைத்துவிடூவது மேல்.

    ReplyDelete
  3. அரசு நிர்வாகம் மோசமாக உள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி