தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். நேற்று வரை, 29,933 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இதில், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு போக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. சுயநிதி கல்லுாரிகள் மூலம், 900 இடங்கள் வரை, மாநிலத்திற்கு கிடைக்கும்.இந்த இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உள்ளது. இதற்கான, விண்ணப்ப வினியோகம், மே, 14ல் துவங்கியது.
நேற்று வரை, 29,933 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்; 17,142 பேர், விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் சென்று சேர்ந்ததை, www.tnhealth.org என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.விண்ணப்பம் பெற, இன்றே கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன், 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மாணவர் தர வரிசைப்பட்டியல், ஜூன், 12ம் தேதி வெளியிடப்பட்டு, 18ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு துவங்கும்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இதில், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு போக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. சுயநிதி கல்லுாரிகள் மூலம், 900 இடங்கள் வரை, மாநிலத்திற்கு கிடைக்கும்.இந்த இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உள்ளது. இதற்கான, விண்ணப்ப வினியோகம், மே, 14ல் துவங்கியது.நேற்று வரை, 29,933 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்; 17,142 பேர், விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் சென்று சேர்ந்ததை, www.tnhealth.org என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.விண்ணப்பம் பெற, இன்றே கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன், 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மாணவர் தர வரிசைப்பட்டியல், ஜூன், 12ம் தேதி வெளியிடப்பட்டு, 18ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு துவங்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி