கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2014

கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு.


கடந்தாண்டு பொறியியல் கட்- ஆப் மார்க் பட்டியலை கல் லூரிகள், பாடப்பிரிவுகள், இடஒதுக் கீடு வாரியாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேருவ தற்கு மே 3-ம் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற் பனையாகி இருக்கின்றன. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை மே20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இதற்கிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளி யானது. இதில், பொறியியல் படிப்புக்கான கணிதம், இயற் பியல், வேதியியல் பாடங்களில் 8,285 பேர் 200-க்கு 200 மதிப் பெண் எடுத்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு பொறி யியல் படிப்புக்கான கட் ஆப் மார்க் அதிகரிக்கும் என்று கல்வி யாளர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.

கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க்

இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக அண்ணா பல்கலைக் கழகம்,கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க் விவரங்களை இணைய தளத்தில்www.annauniv.eduவெளியிட்டுள்ளது.இதில், கல்லூரிகள், பாடப் பிரிவுகள், இடஒதுக்கீடு வாரி யான கட் -ஆப் விவரங் களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம், இந்த ஆண்டு எவ்வளவு கட்- ஆப் மார்க் வரும் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி